27 அங்குலமே உள்ள 22 வயது கல்லூரி மாணவி உலகின் குள்ளமான பெண்ணாக கின்னஸில் இடம்..!!

Read Time:1 Minute, 47 Second

1530jordanஅமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம்  27 அங்குலம் தான்.

பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜோர்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால், பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம்.

இவர்கள் இருவரும் மத்திய இல்லினொய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சீயர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள். பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மெஜிக் என்று பல விடயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார்.

28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார், பிரிட்ஜெட்.

பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் 24 அங்குலம். அவர் கடந்த 1895ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்- கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்..!!
Next post வட, கிழக்கிலிருந்து இராணுவத்தை விலகச் சொல்வது ஏனென்று இப்போதாவது சிங்கள மக்கள் உணர வேண்டும்; மனோ கணேசன்-