துருக்கி முன்னாள் இரா­ணுவத் தள­ப­திக்கு ஆயுள்­­தண்­ட­னை..!!

Read Time:1 Minute, 34 Second

1533Turkeyதுருக்­கியில் பிர­தமர் ரிசெப் தயிப் எர்­டோகன் தலை­மை­யி­லான ஆட்­சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்­டிய முன்னாள்  இரா­ணுவத் தள­பதி இல்கர் பஸ்பக்  ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ளது.

ஆட்சி கவிழ்க்க  சதி தீட்­டிய  தலைமை தள­பதி பஸ்பக், எதிர்க்­கட்சி தலைவர் மற்றும் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் உட்­பட 275 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

இவர்கள் மீது இஸ்­தான்புல்  நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்­டது. இந்த வழக்கில் 5 ஆண்­டு­க­ளுக்கு பிறகு நேற்று  முன்­தினம்  தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அதில், முன்னாள் தலைமை தள­பதி இல்கர் பஸ்­பக்­க­ருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இவர் தவிர மேலும் 253 பேருக்கும் தண்­ட­னைகள் விதிக்­கப்­பட்­டன.

இவர் தவிர நிருபர் துன்னே ஓஷிகள், சட்டத்தரணி லகமல் கெரிங்குஷ் உள்­ளிட்­டோ­ருக்கும் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மேலும் பத்­தி­ரி­கை­யாளர் முஸ்­தபா பல்டே மற்றும் எதிர்­க்கட்சி தலை­வ­ருக்கு 34 ஆண்­டுகள் சிறைத் தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது. இந்த வழக்கில் இருந்து 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக எண்மர் பங்கேற்பு..!!
Next post மரண வீட்டுக்குச் சென்ற பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை..!!