அமெரிக்காவில் லீவு அன்றைக்கு ‘சுதந்திர தினம்..!!

Read Time:2 Minute, 2 Second

download (6)அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது சுதந்திர உணர்வை வெளிக்காட்டும் வகையில் சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் இந்தியர்கள் தங்களது தேசப்பற்றை மறந்து விடுவதில்லை. இதற்கு அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களே சாட்சி.

அணி வகுப்பு ஊர்வலங்களும், வண்ணமயமான மிதவை வண்டிகளும், இந்திய உணவு வகைகளுடன் கூடிய விருந்தும் இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.நியூயார்க் நகரில் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது..

இந்த ‘இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்’. கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, நியுயார்க்கின் புறநகர்ப் பகுதியான லாங் ஐலண்டில் ஒரு அணிவகுப்பும், நியுஜெர்சியில் ஒரு ஊர்வலமும் நடத்தப்படும். ஹிக்ச்விலே நாஸு கவுண்டியில் உள்ள லிட்டில் இந்தியா எனப்படும் புதிய குடியிருப்பில் சென்ற ஞாயிறன்று இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

பொதுவாக வருடந்தோறும் இந்த விழாவானது விடுமுறை நாட்களிலேயே நடைபெறும். இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் இது கொண்டாடப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி..!!
Next post தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு..!!