மிகவும் அழகாக இருப்பதால் நகரசபை உறுப்பினர் பதவியை வகிக்க தடை..!!

Read Time:2 Minute, 41 Second

imagesஈரா­னிய நகர சபை­யொன்­றுக்­கான தேர்­தலில் வெற்றி பெற்ற பெண் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு, அவர் மிகவும் கவர்ச்­சி­க­ர­மாக இருப்­ப­தாக தெரி­வித்து பத­வியை வகிக்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நினா சிஹ்­கலி மொராடி (27 வயது), காஸ்வின் நகர சபைக்­கான தேர்­தலில் 10000 வாக்­கு­களைப் பெற்று அந்த நகர சபை ஆச­னங்­க­ளுக்­காக போட்­டி­யிட்ட 163 வேட்­பா­ளர்­களில் 14 ஆவது இடத்தை பெற்­றி­ருந்தார்.

நகர சபை உறுப்­பினர் ஒருவர் தனது ஆச­னத்தை விட்டுக் கொடுக்க முன் வந்­த­தை­ய­டுத்து நகர சபைக்­கான மாற்று உறுப்­பி­ன­ராக நிய­மனம் பெறும் வாய்ப்பை நினா சிஹ்­கலி பெற்றார்.

ஆனால் அவ­ரது நிய­ம­னத்தை அவ­ரது கவர்ச்­சி­க­ர­மான தோற்­றத்தைக் காரணம் காட்டி நகர சபை நிரா­க­ரித்­துள்­ளது.

”எங்­க­ளுக்கு நவ­நா­க­ரிக நடை நடக்கும் மொடல் அழகி தேவை­யில்லை’ என நகர சபை தலைவர் தெரி­வித்து நினா சிஹ்­கலி மேற்­படி பத­வியை வகிக்க தகு­தி­யற்­றவர் என அறி­வித்­துள்ளார்.

கட்­டட கலையில் பட்டம் பெற்­ற­வ­ரான நினா சிஹ்­கலி, தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கையின் போது தன­து தோற்­றத்தால் மக்­களின் கவ­னத்தை திசை திருப்பி வாக்­கு­களைப் பெற்­றுள்­ள­தா­கவும் அவர் இள­மை­யா­ன­வ­ரா­கவும் கவர்ச்­சி­க­ர­மா­ன­வ­ரா­கவும் இருந்­த­மையால் மட்­டுமே தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ­ரது எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

‘இளை­ஞர்­க­ளுக்­கான எதிர்­கா­லத்­துக்­காக இள­மை­யான திட்­டங்கள்’ என்­பதே நினா சிஹ்­க­லியால் தேர்தல் பிர­சார சுலோ­க­மா­க முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஸன் ரோவ்ஹானி, நாட்டிலுள்ள பெண்களின் உரிமைகளை மேம்படுத்த போவதாக சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்தன பகுதியில் ஒருவர் போத்தலால் குத்திக்; கொலை..!!
Next post நவநீதம்பிள்ளையின் பயணத் திட்டம் அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவிப்பு..!!