நவநீதம்பிள்ளையின் பயணத் திட்டம் அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 51 Second

download (4)ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணம் திட்டம் தொடர்பாக அவரது பேச்சாளர் ரூபேட் கொல்வில்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் 25ம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நவநீதம்பிள்ளை இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

மேலும் இலங்கையின் நீதித்துறையின் மூத்த அதிகாரிகளையும் தேசிய மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தை கண்காணிக்கும் குழுவின் உறுப்பினர்களையும் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார்.

சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு களப் பயணங்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

31 ஆம் திகதி தனது இலங்கைப் பயணத்தை நிறைவு செய்து கொள்ளும் நவநீதம்பிள்ளை, கொழும்பில் செய்தியா ளர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிகவும் அழகாக இருப்பதால் நகரசபை உறுப்பினர் பதவியை வகிக்க தடை..!!
Next post எகிப்தில் வன்முறைகள் வருத்தமளிக்கும் விடயம் – துருக்கி..!!