எகிப்தில் வன்முறைகள் வருத்தமளிக்கும் விடயம் – துருக்கி..!!

Read Time:2 Minute, 11 Second

download (5)எகிப்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் அரேபிய நாடுகளுக்கு வருத்தமளிக்கும் விடயம் என துருக்கி விமர்சித்துள்ளது.

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், துருக்கி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இரண்டு நாடுகள் எகிப்திலுள்ள தமது தூதுவர்களை நேற்று மீள அழைத்திருந்தன.

எகிப்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக 600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குலகம் எகிப்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு தவறியுள்ளதாக துருக்கி பிரதமர் ரிக்கப் தயிப் எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில், எகிப்து விவகாரம்  தொடர்பில் அவசர கூட்டமொன்றை நடத்துமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எகிப்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு தனிநபருக்காகவும் தாம் மிகவும் வருந்துவதாக துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எகிப்தின் உள்விவகாரங்களில் துருக்கி தலையிடுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.

நண்பரொருவன் கஷ்டத்திலுள்ள சந்தர்ப்பத்தில், அவரை அதிலிருந்து மீட்பதற்கே தமது நாடு செயற்படுவதாகவும் துருக்கி ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவநீதம்பிள்ளையின் பயணத் திட்டம் அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவிப்பு..!!
Next post மீளாத் துயரிலிருக்கும் றிஸானாவின் பெற்றோரை புண்படுத்தும் குரல்கள்..!!