ஷாருக்கானுக்கு லுங்கி அணிவித்த தீபிகா..!!

Read Time:3 Minute, 25 Second

1668B_Id_407850_srk-sariலுங்கி டான்ஸ் – தலைவருக்கு மரியாதை’ எனும் பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை பொலிவூட் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை ‘எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டை ஒட்டியே இந்தப் பாடல் உரு­வாக்கப்பட்டாலும், படத்துக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர்.

ஹனி சிங் உருவாக்கியுள்ள இந்த லுங்கி டான்ஸ், டி சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. சில தினங்களுக்கு முன் டி சீரிஸ் நிறுவன தலைவர் பூஷன் குமார் இந்தப் பாடல் குறித்து ஷாரூக்கானிடம் கூறி, நடனமாடக் கேட்டபோது, ‘ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது!

அவரது தீவிர ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் இந்தப் பாடலுக்கு நடனமாடுவது எனக்குப் பெருமை,’ என்றாராம். அதேவேளை தீபிகாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, லுங்கி (சாரம்) டான்ஸ் ஆடுவதற்கு மிக விருப்பத்துடன் ஒப்புக் கொண்டாராம்.

ரஜினி சார் மிகப் பெரிய நடிகர், சாதனையாளர். அவரைக் கௌரவிக்க இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி,’ என்றார் ஷாரூக்கான். இந்தப் பாடலுக்கு சின்னி பிரகாஷ் நடனம் அமைத்துள்ளார்.

தலைவருக்கு மரியாதை என்ற தலைப்புடன் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் ஷாருக்கான், தீபிகா சாரம் (லுங்கி) அணிந்து தோன்றுகின்றனர். இப்படம் கடந்த 9 ஆம் திகதி வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இப்படத்தின் ஊக்குவிப்பு நிகழ்வொன்றுக்காக ஷாருக்கானும் தீபிகாவும் சென்னைக்கு சென்றிருந்தபோது, திடீரென மேடையில் லுங்கி அணிந்து நடனமாட விரும்பினார் ஷாருக்கான்.

லுங்கி அணிந்திருந்தபோது சங்கடமாக உணர்ந்ததாக ஷாருக்கான் டில்லியில் கூறியுள்ளார். ‘நான், சிம்பிள் ஜீன்ஸ் பாண்ட் அணிபவன்.  லுங்கி எனக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் இறுதியில் தீபிகா எனக்கு உதவினார்’ என ஷாருக்கான் கூறினார்.  இது குறித்து தீபிகா படுகோனே கூறுகையில், ‘ஷாருக்கான் தீடீரென லுங்கி அணிய வேண்டுமென்றார்.

நான் ஒரு சாரியை அவருக்கு லுங்கியாக அணிவித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நதீகா லக்மாலி உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!
Next post யானையை விரட்ட துப்பாக்கிப் பிரயோகம்..!!