சுறாக்களை வசியப்படுத்தும் சுழியோடி..!!

Read Time:2 Minute, 44 Second

1620sharkஆபத்­தான விலங்­கு­க­ளாகக் கரு­தப்­படும் சுறாக்­களை சுழி­யோடி ஒருவர் வசி­யப்­ப­டுத்தி அவற்றை தனது உள்ளங் கையில் ஏந்­தி­யி­ருக்கும் காட்­சியை மற்­றொரு சுழி­யோடி ஒருவர் படம்­ பி­டித்­துள்­ளார்.

டொம் என்ற பெய­ரு­டைய மேற்­படி சுழி­யோடி சுறாவை ஹிப்­னா­டிஸ முறையில் வசி­யப்­ப­டுத்தும் கலையை கற்­றுள்­ளாராம்.  சுறாவின் மூக்கை மென்­மை­யாக தட­வு­வதன் மூலம் சுறாவை வசி­யப்­ப­டுத்தி அதை தற்­கா­லி­க­மாக நட­மாட முடி­யாமல் செய்யும் ஆற்­றலை அவர் கொண்­டுள்ளார்.

சுமார் 15 நிமிட நேரம் சுறாக்கள் இவ்­வாறு அசை­யாமல் நிற்­கின்­றன. இதனால் சுறா­வுக்கு தீங்கு எதுவும் ஏற்­ப­டு­வ­தில்லை என டொம் கூறு­கிறார்.  அச்­சு­றாக்கள் டொம்மின் கரங்­க­ளுக்கு முற்­றாக கட்­டுப்­பட்­டு­வை­யாக காணப்­பட்­டன என பஹாமஸ் நாட்டின் கடற்­ப­கு­தியில் இப்­பு­கைப்­ப­டங்­களைப் பிடித்த கிரஹம் கிப்ஸன் தெரி­வித்­துள்ளார்.

31 வய­தான கிரஹம் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த வர்த்­தத்­துறை மாண­வ­ராவார். இவர் விடு­ மு­றைக்­காக பஹா­ம­ஸுக்கு சென்­ற­போது இப்­பு­கைப்­ப­டங்­களை பிடித்­துள்ளார்.

டொம் வசி­யப்­ப­டுத்­திய சுறாவின் உடலை தானும் தொட்­டுப்­பார்த்த­தாக கிரஹம் கிப்ஸன் தெரி­வித்­துள்ளார். எனினும், மனி­தர்­க­ளுக்கு  சுறாக்கள் ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விலங்­குகள் என்­பதை நினைவில் கொள்­வது அவ­சியம் என அவர் எச்­ச­ரிக்­கிறார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்பேர்ன் நக­ரி­லுள்ள நீரியல் பூங்காவொன்றில் பணி­யாற்றும் டாக்டர் ரொப் ஜோன்ஸ் இந்த வசியக் கலையை நீண்­ட­கா­ல­மாக பயன்­ப­டுத்தி வரு­கிறார்.

சுறாக்­களில் இரத்தம், உயிரணு போன்றவற்றை பெறுவதற்காகவும் வேறு பரிசோதனைகளுக்கும் டாக்டர் ரொப் ஜோன்ஸ் வசிய முறைமையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது – சீமான்..!!
Next post இந்தியப் பிரதமருடன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு பொதுநலவாய மாநாட்டுக்கும் அழைப்பு..!!