இந்தியப் பிரதமருடன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு பொதுநலவாய மாநாட்டுக்கும் அழைப்பு..!!

Read Time:1 Minute, 56 Second

images (3)இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற்றவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் புதுடில்லி சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நேற்றுக்காலை இந்தியப் பிரதமர் மன்னமோகன் சிங்கைச் சந்தித்து பேச்சுவார்‌தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போதே பொதுநலவாய மாநாட்டுக்கான அழைப்பினை அமைச்சர் பீரிஸ் கையளித்துள்ளார்.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு குறித்தும் வடமாகாணசபை தேர்தல் தொடர்பிலும் அமைச்சர் பீரிஸ் விளக்கிக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த பல கட்சிகளும் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளன. இந்த நிலையிலேயே பொதுநலவாய மாநாட்டுக்கான அழைப்பை இந்தியப் பிரதமருக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுறாக்களை வசியப்படுத்தும் சுழியோடி..!!
Next post 81 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரைக் கைது செய்யக் கோரி ஆர்பாட்டம்..!!