சீனா: பணியின்போது நிர்வாணமாக நீந்தி கும்மாளமடித்த 8 போலீசார் பணிநீக்கம்..!!

Read Time:2 Minute, 6 Second

20-china-police-600‘ஃபேஸ் புக்’, ‘நெட்லாக்’, ‘யூடியூப்’ போன்ற இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்த சீன போலீசார் தொடர்பான புகைப்படங்கள் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.

சீனாவின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜியாங்சியின் வடக்கு பகுதியில் குளுகுளு மலைப் பிரதேசமான லுஷான் பகுதி உள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் எப்போதும் இப்பகுதியில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் கடமையாற்ற சென்ற போலீசார், சீருடைகளை எல்லாம் ஒரு நீர்நிலையின் கரையோரம் கழற்றி வைத்துவிட்டு, நிர்வாணமாக நீந்தி கும்மாளமடிக்கும் காட்சிகளை சில குறும்புக்கார இளைஞர்கள் வீடியோவில் படம் பிடித்தனர்.

இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த காட்சிகள் விறுவிறுவென காட்டுத்தீ போல் பரவியதால் சீன போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த காட்சிகளை உன்னிப்பாக கவனித்த உயரதிகாரிகள் கடமையின் போது கண்ணியக் குறைவாக நடந்துக்கொண்ட 8 போலீசாரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டனர்.

மேலும், 3 போலீஸ் அதிகாரிகளுக்கும் பதவி குறைப்பு அல்லது பதவி பறிப்பு தண்டனை வழங்கப்படும் எனவும் மாகாண போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முளைச்சு இரண்டிலை விடல .. அதுக்குள்ளே பிகினியா ??ஆசியாவின் அதிசயமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது..!!
Next post இவர்தான் உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண்ணாம்..!!