200 கோடி வசூலித்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’..!!
Read Time:1 Minute, 17 Second
பொலிவூட் நாயகன் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 200 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) வசூல் செய்துள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் கடந்த 9ஆம் திகதி வெளியானது. வெளியான முதல் வாரத்திலேயே 150 கோடியை ரூபாவை வசூல் செய்தது.
யூடிவீ மோஷன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இப்படத்தினை 75 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.
தற்போதும் இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் சிறப்பாகவே ஓடுவதால் இந்திய அளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாற வாய்ப்புள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இநதிய அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் அமீர்கான் நடிப்பில் வெளியாகி பெரு வெற்றிபெற்ற ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating