விமானத்தின் இறக்கைமீது பயணித்து புதிய சாதனை படைத்த சிறுமிகள்..!!

Read Time:3 Minute, 56 Second

1770654 (1)பிரித்­தா­னியாவைச் சேர்ந்த 9 வய­தான இரு சிறு­மிகள் விமா­னத்தின் இறக்கையில் நின்­ற­வாறு பய­ணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்­தி­யுள்­ளனர்.

பிரித்­தா­னி­யாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வய­தான சிறு­மி­களே இச்­சா­த­னைக்குச் சொந்­தக்­கா­ரர்­க­ளாவர். இச்­சி­று­மிகள் இருவரும் சகோ­த­ரி­க­ளாவர்.

இச்­ச­கோ­த­ரிகள் தமது குடும்­பத்தில் விமா­னத்தின் இறக்­கையில்  பய­ணிக்கும் 3ஆவது சந்­த­தி­யி­னராம். இச்­சா­தனை பய­ணத்­தினை 6 வய­தி­லி­ருந்தே மேற்­கொள்ள இவர்கள் ஆர்­வ­மாக இருந்­துள்­ளனர்.

ஆனால் தற்­போது இந்த ஆபத்­தான சாத­னையை தசை தேய்வு தொடர்­பான நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள அவர்­க­ளது தோழன் எல்­லியின் உயிரைக் காப்­பாற்ற நிதி சேக­ரிக்கும் நோக்கில் ஒரு விழிப்­பு­ணர்வு பய­ண­மா­கவே மேற்­கொண்­டுள்­ளனர்.

வெற்­றி­க­ர­மான பய­ணத்தின் பின்னர் ரோஸ் பேசு­கையில், பயணம் மிகவும் பிரம்­மிப்­பாக இருந்­தது. உண்­மையில் அது எவ்­வா­றா­னது என விப­ரிப்­பது கடி­ன­மா­னது. பற­வையில் பய­ணித்­தது போல இருந்­தது.

உய­ரத்தில் செல்லும் போது சற்று பய­மாக இருந்­தது. ஆனாலும் நான் உய­ரத்தில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். ஆகா­யத்தில் இருக்கும் போது வீடுகள் எல்லாம் சிறு­வர்கள் கட்­டி­வி­ளை­யாடும் வீடுகள் போல இருந்­தது.

கடும் குளி­ராக இருந்­தது. இப்­போது நான் நடுங்­கு­கிறேன். இந்த பய­ணத்தால் நான் பெரு­மை­ய­டை­கின்றேன். மீண்டும் ஒரு தடவை இதனைச் செய்வேன் எனத் தெரி­வித்­துள்ளார்.

‘நாங்கள் இரு­வரும் இணைந்து இள­வ­யதில் விமான சிறகில் பய­ணித்­த­வர்கள் என்ற சாத­னை­யுடன் எல்­லிக்கும் உத­வு­வ­தற்கு முன்­வந்தோம். இது கடும் இரைச்­ச­லான பய­ண­மாக இருந்­தது’ என பிளேம் கூறியுள்ளார்.

எல்­லியின் தாயும் , தசை தேய்வு தொடர்­பான சிறு­வர்­க­ளுக்கு உரு­வாக்­கப்­பட்­டுள்ள டச்சன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் அறக்­கட்­டளை அமைப்பின் நிறுவு­ன­ரு­மான எமிலி க்ரொஸ்லி கூறு­கையில்,  ‘இச்சா­த­னை­யுடன் எங்­க­ளது அறக்­கட்­டளை தொடர்­பான விழிப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்­திய இந்த சிறு­மி­களால் நாங்கள் பெரு­மை­ய­டை­கின்றோம் ‘என்றார்.
மணிக்கு 100 கி.மீ வரை வேக­மான விமா­னத்தைச் செலுத்­தி­யது அவர்­க­ளது தாத்­தாக்­க­ளாகும். இவர்­களில் நோர்மன் என்­பவர் கூறு­கையில், ‘பேரப்­பிள்­ளைகள் என்­பதால் மிகக் கவ­ன­மாகச் செயற்படவேண்டி இருந்தது.

பல முறை இப்பயணத்தை மேற்கொள்ள அவர்கள் விரும்பியபோதும் முன்னர் நான் அவ்வாறானதைத் தவிர்த்தேன்’ இம்முறை அவர்களின் நோக்கத்தை கருத்திற்கொண்டு ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

177065 1770020 1770654 (1)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளியில் ஹெல்மட்டில் புகுந்த நீர்…விண்வெளி வீரரின் அனுபவம்..!!
Next post 18 பேருடன் கடலில் வீழ்ந்த ஹெலிகொப்டர்..!!