மூன்றுமாத சம்பளம் வழங்காத நிலையில் கட்டாரில் 10 இலங்கையர்கள் தவிப்பு..!!

Read Time:3 Minute, 21 Second

download (18)இலங்கைப் பணியாளர்கள் 16 பேர் கட்டாரிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் அமைப்பொன்றினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆங்கில நாளோடொன்று கூறியுள்ளது.

கட்டாரிலுள்ள ஒப்பந்த நிறுவனமொன்றுக்கு தாம் சாரதிகளாக வாடகைக்கு அமர்த்தப்பட்டதாக ‘கல்வ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அனுப்பப்பட்டுள்ள இமெயில் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறந்த வேலை வாய்ப்பினை பெற்றுதருவதாக கூறி தொழில் வீசாவினை வழங்கியுள்ள  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகள் இலங்கையிலும் இருப்பதாக அந்த இமெயிலில் கூறப்பட்டுள்ளது.

கட்டாருக்கு பணிக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தமக்குரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என அந்த இமெயிலில் கூறப்பட்டுள்ளது.

இப்பணியாளர்கள் குறித்த நிறுவனத்தின் கட்டிடத்தின் பின் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பலர்  நோய்வாய் பட்டுள்ளனர். சிலர் மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு தாம் உதவவில்லையென கூறுவது உண்மைக்குப் புரம்பான செய்தியென இலங்கைத் தூதரகம் கூறியுள்ளது.

கல்வ் டைம்ஸ் க்கு இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவரால் அனுப்பப்பட்டிருக்கும் இமெயிலில் இவ் விடயம் தொடர்பாக தாம் அறிந்திருப்பதாகவும் இப் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதுடன் குறிக்கப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுக்களிலுள் ஈடுபட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஆனால், இலங்கையிலுள்ள போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இலங்கைத் தூதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கல்வ் டைம்ஸில் வெளிவந்த பின்னரே தூதரக அதிகாரிகள் தம்மை தொடர்பு கொண்டிருந்ததாக பாதிக்கப்பட்ட இலங்கையர் கூறியுள்ளார்.

6 மாதத்திற்கு முன்னரான நிலைவரத்தின் படி தொழிலாளர் விதிகளை மீறி பணியாளர்களை அனுப்பிவைக்கும் 2400 நிறுவனங்களுக்கும் 1200 தனிநபர்களுக்கும் கட்டார் தடை விதித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 4000 பேர் கைது..!!
Next post போதைக்கு அடிமையான நான் இறப்பின் விளிம்பில் நிற்கிறேன்: மைக் டைசன்..!!