வடகொரியாவில் அதிபரின் முன்னாள் காதலி உள்பட 12 பேருக்கு மரண தண்டனை..!!

Read Time:2 Minute, 3 Second

4c52940b-5378-45db-9d91-bb850097f0dd_S_secvpfவடகொரியா அதிபராக கிம்ஜாங்யுங் பதவி வகித்து வருகிறார். இவரது முன்னால் காதலி ஹயான் சாங்–எல் பிரபல பாப்பாடகி.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்தனர். அதை அறிந்த கிம்ஜாங்–யுன் தந்தையும் முன்னாள் அதிபருமான கிம்ஜாங்–இல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, இவர்களது காதல் முறிந்தது. அதை தொடர்ந்து ஹயான், வடகொரிய ராணுவ அதிகாரியை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

இருந்தும் அவ்வப்போது, முன்னால் காதலர் கிம்ஜாங்– யுன்னை சந்தித்து வந்தார். தற்போது உன்னாசு ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாடகி ஹயானும் அவரது இசைக்குழுவை சேர்ந்த 11 பேரும் கவர்ச்சிகரமான செக்ஸ் காட்சிகளுடன் கூடிய இசைநிகழ்ச்சி நடத்தி அதை வீடியோ படம் எடுத்து சீனா மற்றும் வடகொரியாவில் விற்றதாக தெரிகிறது.

அது, வடகொரியா பாலியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இவர்கள் அனைவரும் கடந்த 17–ந்தேதி கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, கடந்த 9 நாட்களுக்கு முன்பு எந்திர துப்பாக்கியால் சுட்டு அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தண்டனையை துப்பாக்கி படையினர் நிறைவேற்றியதாக தென்கொரியா பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பிய களியாட்ட விழா வன்முறை தொடர்பில் 279 பேர் கைது..!!
Next post பிரபாகரனின் வாழ்க்கை திரைப்படமாக தயாரிப்பு..!!