நவனீதம்பிள்ளையின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு..!!

Read Time:1 Minute, 32 Second

Navaneethan_CIஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தேசிய பாதுகாப்புக்கு எதிராக விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் இராணுவத்தை அகற்றுதல், பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 800 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நீதி அமைச்சிடம் ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நவனீதம்பிள்ளையின் இந்த அனைத்து கோரிக்கைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதென அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு நவனீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய், தந்தையுடன் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!
Next post மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 150 கோடி..!!