வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்திருக்கும் தம்பதி..!!

Read Time:1 Minute, 44 Second

1890Tank-1பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்துள்ளார். இதனால் ஒரு போர்க்களம் போல் அவ்வீடு காட்சியளிக்கிறது.

வோர்விக் ஷயர் டன்சர்ச் நகரைச் சேர்ந்த இயந்திரவியலாளர் அன்ட்ரூ பாகெரும் அவரின் மனைவி சாலியும் இராணுவத் தாங்கிகளை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள்.

கடந்த 20 வருடங்களாக இராணுவத்தாங்கிகளை தாம் சேகரித்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில அரியவகை இராணுவத் தாங்கிகளும் தம்மிடம் இருப்பதாக அன்ட்ரூ பாகெர் கூறுகிறார். பல்வேறு கண்காட்சிகளிலும் தமது இராணுவத் தாங்கிகளை இவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மோசமான நிலையிலுள்ள இராணுவத் தாங்கிகளை தாம் வாங்கி, அவற்றை பாகங்களாகப் பிரித்து சீராக்கி, வர்ணம் பூசி மீண்டும் ஒன்றிணைப்பதாக அன்ட்ரூ கூறுகிறார்.

அவரின் மனைவி சாலியும் இராணுவத் தாங்கிகள் மீது அபிமானம் கொண்டவர் என்பதால் அவரும் இந்த வர்த்தகத்தில் இணைந்துகொண்டாராம்.

இப்போது 16, 15 வயதுடைய தமது இரு பிள்ளைகளும் தமது சொந்த தாங்கிகளை வைத்திருப்பதாக இத்தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளைச் சந்தேகநபர் கைது..!!
Next post தொலைக்காட்சித் தொடராகிறது ‘ரம்போ..!!