தொலைக்காட்சித் தொடராகிறது ‘ரம்போ..!!

Read Time:2 Minute, 35 Second

1893Ramboஹொலிவூட் நடிகர் சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னுக்கு, பெரும் புகழ் பெற்­றுக்­கொ­டுத்த ‘ரம்போ’ திரைப்­படம் தொலைக்­காட்சித் தொட­ராக தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

‘ஃபெஸ்ட் பிளட்’ எனும் நாவலை தழு­வி­ய­தாக தயா­ரிக்­கப்­பட்ட முத­லா­வது ரம்போ திரைப்­படம் 1982 ஆம் ஆண்டு ‘ஃபெஸ்ட் பிளட்’ எனும்  பெய­ரி­லேயே வெளி­யா­னது. வியட்நாம் யுத்­தத்தில் பங்­கு­பற்­றிய ஜோன் ரம்போ எனும் பாத்­தி­ரத்தில் சில்­வெஸ்டர் ஸ்டாலோன் நடித்­தி­ருந்தார்.

இதன் தொடர்ச்­சி­யாக ரம்போ ஃபெஸ்ட் பிளட் 11 (1985), ரம்போ 111 (1988) ஆகிய படங்கள் வெளி­யா­கின. இவ்­வ­ரி­சையில் இறு­தி­யாக 2008 ஆம் ஆண்டு ‘ரம்போ’ எனும் படம் வெளி­யா­கி­யது.

அப்­ப­டத்தின் பின்னர் ரம்போ வேடத்தில் தான் நடிக்­கப்­போ­வ­தில்லை என சில்­வெஸ்டர் ஸ்டா லோன் அறி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில், எண்­டெர்­டெய்ன்ட் மன்ட் வன் எனும் நிறு­வ­னமும் ஹொலிவூட் அக் ஷன் படங்கள் பல­வற்றை தயா­ரித்த திரைப்­பட தயா­ரிப்­பாளர் அவி லேர்­னரின்  நியூ இமேஜ் நிறு­வ­னமும் இணைந்து ரம்போ தொலைக்­காட்சித் தொடரை தயா­ரிக்கப் போவ­தாக அறி­வித்­துள்­ளன.

இத்­தொ­லைக்­காட்சித் தொடரின் தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னையும் பங்­கு­பற்றச் செய்­ய­வி­ரும்­பு­வ­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

இதில் ஜோன் ரம்போ வேடத்தில் 67 வய­தான சில்­வெஸ்டர் ஸ்டா லோன் நடிக்­கப்­போ­வ­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கின. ஆனால், இதை ஸ்டோலோனின் பிர­தி­நி­திகள் மறுத்­துள்­ளனர்.

இத்­தொ­லைக்­காட்சித் தொடர் தயா­ரிப்பில் சில்­வெஸ்டர் ஸ்டாலோன் சம்பந்தப்படக்கூடும். ஆனால், அவர் ஜோன் ரம்போ வேடத்தில் நடிக்க மாட்டார் என அவரின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்திருக்கும் தம்பதி..!!
Next post கிளிநொச்சியில் கார் கொள்ளையர் இருவர் கைது..!!