படைகளை அகற்றுமாறு அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்தல்..!!

Read Time:2 Minute, 40 Second

download (17)போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்துக்கு ஒரு சில முகாம்கள் தேவைப்படும் என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு எனக்கு அதீதமாகப்படுகின்றது. கணிசமாக அளவில் இருக்கும் இராணுவத்தினரை ஒரே நாளில் குறைத்து விட முடியாதென பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.

எனினும் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த இரு மாகாணங்களிலும் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை அரசு துரிதப்படுத்த வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.

சிவில் சமூகத்தினரின் மத்தியில் இராணுவம் பெருமளவில் நடமாடுவதும் சிவில் நிர்வாகங்களில் தலையிடுவதும் முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் மீதும் நாட்டுக்குத் திரும்பி வருபவர்கள் மீதும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும் அமைதியான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்பது எனது அபிப்பிராயம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் முடிவு கொடுத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையை புதிய அதிர்வுடனான எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் நாடாகக் கட்டியயழுப்புவதற்குப் பதிலாக சர்வாதிகாரப் போக்கை நோக்கிய திசையில் நாட்டை இட்டுச் செல்வது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது என்றும் நவிப்பிள்ளை நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பின் பிரசார தளங்களில் சிம்மக் குரலோன் சாந்தன் பாடிய எழுச்சிப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன..!!
Next post மரணித்தோருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிக்கு தடை..!!