நெல்சன் மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான பரிசு..!!
உலக அமைதிக்கான முதல் மகாதிர் விருதை தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு மலேஷிய அரசு வழங்கியுள்ளது.
மலேஷியாவில் உள்ள மகாதிர் உலக அமைதி அறக்கட்டளையானது உலக அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கு மகாதிர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அவர் உடல்நலக்குறைவு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த மகாதிர் விருதை தற்போதைய தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டுள்ளார்.
மலேஷியாவில் 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மகாதிர் முகமதுவின் பெயரால் இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது.