193 கி.மீ. வேகத்தில் மோதி அந்தரத்தில் சுழன்ற படகுகள்..!!
மணித்தியாலத்துக்கு 193 கிலோமீற்றர் (120 மைல்) வேகத்தில் இரு படகுகள் மோதிக்கொண்டு அந்தரத்தில் 360 பாகையில் சுழன்று வீழ்ந்த பின்னரும் அதன் சாரதிகள் காயமெதுவுமின்றி தப்பிய சம்பவம் உலக அதி விசைப் படகுகளின் சம்பியன்ஷிப் போட்டிகளில் இடம்பெற்றுள்ளது.
ஏவ்.2 பவர்போட் சம்பியன்ஷிப் எனும் இப்போட்டிகள் பிரிட்டனின் நோட்டிங்ஹாம்ஷியரில் நடைபெறுகின்றன.
இதன்போது, சுவீடன் சாரதி ஜோனாஸ் அண்டர்சன் செலுத்திய படகு, மற்றொரு படகுடன் மோதியதால் மேலே கிளம்பி 360 பாகையில் சுழன்று வீழ்ந்தது.
இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், இப்படகுகளிலிருந்த சாரதிகள் இருவரும் காயமெதுவுமின்றி படகிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.