கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்திச் சென்று சாதனை படைத்த டயானா நயாட்..!!

Read Time:3 Minute, 2 Second

1917diana60064 வயதான பெண்ணொருவர்  கியூபாவுக்கும் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கும் இடையிலான புளோரிடா நீரிணையை பாதுகாப்பு கூண்டுகள் எதுவுமின்றி நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டயானா நையாட் எனும் இப்பெண், கடந்த சனிக்கிழமை கியூபாவிலிருந்து நீந்த ஆரம்பித்தார். 53 மணித்தியாலங்களின்பின்  திங்கட்கிழமை அவர்  புளோரிடா மாநிலத்தின் கீ வெஸ்ட் எனும் இடத்தை அடைந்தார்.

சுறாக்கள் நிறைந்த  இந்நீரிணையில் 177 கிலோமீற்றர் தூரம் கொண்ட இப்பகுதியை, சுறாக்களின் தாக்குதலிருந்து தப்புவதற்கான கூண்டு இன்றி நீந்திக் கடந்த முதல் நபர் டயானா ஆவார்.

இதற்குமுன் நான்கு தடவை இவ்வாறு நீந்தும் முயற்சியில் டயானா ஈடுபட்டார். எனினும் துணைக்கு வந்த படகுகளின் கோளாறு, சூறாவளி, கடுமையான அலைகள் போன்றவற்றினால் அவரின் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

கடந்த வருடம் ஜெல்லி பிஷ்களின் தாக்குதல் காரணமாக அவரின் முகம் வீங்கியதால் பயணத்தை பாதியிலேயே கைவிட்டார். இம்முறை ஜெல்லி பிஷ்களிடமிருந்து முகத்தை பாதுகாப்பதற்காக விசேட சிலிக்கன் முகக்கவசமொன்றை அவர் அணிந்திருந்தார்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த  சுசி  மரோனி எனும் பெண் வெற்றிகரமாக இந்நீரிணையை நீந்திக் கடந்தார். ஆனால் அவர் சுறாக்களிடமிருந்து தப்புவதற்கான கூண்டுடொன்றுக்குள் இருந்தவாறே நீந்தினார்.

கடந்த வருடம் அவுஸ்திரேலியரான பென்னி பல்பிறே எனும் பெண் 79 மைல் தூரம் நீந்தியபின் கடுமையான அலைகள் காரணமாக முயற்சியை கைவிட்டார்.

இவ்வருடம் ஜூன் மாதம் மற்றொரு அவுஸ்திரேலிய பெண்ணான குளோ மெக்ரடெல் 14 மைல் தூரம் நீந்தியபின் ஜெல்லி பிஷ் தாக்குதல் காரணமாக அவரின் முயற்சியும் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பார்துகாப்பு கூண்டுகள் எதுவுமின்றி நீந்தி புளொரிடா நீரிணையை கடந்ததன் மூலம் தனது ஆயுட்கால கனவை நனவாக்கியதாக 64 வயதான டயானா நைட் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் காலமானார்..!!
Next post தள்ளிப்போன விஜயின் ஜில்லா