நீலப்படங்களை காட்டுவதாக அநாமதேய முறைப்பாடு..!!
வடக்கில் சேவையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீலப்படக்காட்சிகளை கணினியில் காட்டிவருவதாக அநாமதேய முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஓர் அநாமதேய முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைப்பாடு கிடைத்ததை பொலிஸ் பேச்சாளர் இன்று உறுதி செய்துள்ளார்.
ஆனால், இவ்வாறான சம்பவம் நடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.