மாணவி காணாமல் போன விடயமாக இருவருக்கு விளக்கமறியல்..!!
யாழ் மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் உள்ள 16 வயது மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கும் மற்றுமொரு குடும்பத்தினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்விருவரையும் இரண்டு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விரு குடும்பத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் மாலையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.