மனைவியின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்திய கணவர்..!!
ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியின் தலைமயிரை வெட்டி அவரைத் தாக்கி அதைத் தடுக்க வந்த அவரது பெற்றோரையும் தாக்கிய நபரொருவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி களுத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அருண அளுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை வஸ்கடுவ, தெதியவலையைச் சேர்ந்த உபுல் சஞ்சீவ என்ற நபருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தனது கணவர் தம்மைத் தாக்கி கொடுமைப்படுத்துமிடத்து அதைத் தடுக்க வந்த தனது தாயையும் தந்தையையும் தாக்கிவிட்டு தனது நீண்ட கூந்தலை வெட்டி தம்மை விகாரமாக்கியதாகவும் தெதியவலையைச் சேர்ந்த குமுதினி என்பவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக களுத்துறை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள குற்ற அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.