முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் காலமானார்..!!

Read Time:1 Minute, 56 Second

1936_sஅதி­பார குத்­துச்­சண்­டையில் உலகின் முன்னாள் சம்­பி­யன்­களில் ஒரு­வ­ரான டொமி மொரிஸன் தனது 44 ஆவது வயதில் ஞாயி­றன்று இரவு கால­மானார்.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த டொமி மொரிஸன், 1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் போர்­மனை தோற்­க­டித்து உலக குத்­துச்­சண்டை அமைப்பின் (டபிள்யூ பி.ஓ.) உலக அதி­பார சம்­பியன் பட்­டத்தை வென்­றவர்.

1996 ஆம் ஆண்டு ஆர்தர் வீதர்­ஸு­ட­னான போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு முன்னர் டொமி மொரிஸன் எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. அதன்பின் அவரின் குத்­துச்­சண்டை வாழ்க்கை தடு­மாறத் தொடங்­கி­யது.

எனினும் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை எனக் கூறிய டொமி மொரிஸன், பல­த­டவை மீண்டும் குத்­துச்­சண்டை அரங்­குக்கு திரும்ப முயன்றார். இறு­தி­யாக 2008 ஆம் ஆண்டு அவர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஓய்வு பெற்றார்.

இந்­நி­லையில், ஞாயி­றன்று இரவு அவர் கால­மா­ன­தாக மொரி­ஸனின் குத்­துச்­சண்டை ஊக்­கு­விப்­பா­ள­ரான டொனி ஹோல்டன் தெரி­வித்­துள்ளார். எனினும் இம்­ம­ர­ணத்­துக்­கான கார­ணத்தை ஹோல்டன் வெளி­யி­ட­வில்லை. 1990 ஆம் ஆண்டு ‘ரொக்கி வீ’ எனும் குத்­துச்­சண்டை திரைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோனுடன் டொமி மொரிஸன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைக்கு பதிலாக பாம்பை வயிற்றில் சுமக்கும் பெண்..!!
Next post கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்திச் சென்று சாதனை படைத்த டயானா நயாட்..!!