பாம்பு பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி?

Read Time:1 Minute, 55 Second

snaga-pampu-girlஇலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்ணான நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அப்பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார்.

இந்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அந்த பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேற்கண்டவாறு கோரினார்.

தனது தரப்பை சேர்ந்தவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதியளவான ஆதாரங்கள் இன்மையினால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரினார்.

பாம்பிற்கு பல் பிடுங்கியிருப்பதனால் அந்த பாம்பினால் சாப்பிடமுடியாது .இது மிருக வதைத்தடைச்சட்டத்தை மீறுவதாகும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜரான மிருககாட்சி சாலை ஊர்வன பிரிவு பணிப்பாளர் பிரேமசிறி பீரிஸ் பாம்புகளுக்கு பல் பிடிங்கினாலும் அதனால் சாப்பிடமுடியும் என்றும் இது மிருக வதைல்ல என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவரு கண்ண உருட்டுனா… சந்திரமுகி தான்..!!
Next post பேயோட்ட முயன்ற இருவர் உயிரிழப்பு..!!