தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை

Read Time:1 Minute, 59 Second

Tamilnadu.jpg போர் பதட்டம் காரணமாக தமிழக கடலோர பகுதி வழியாக விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவு துறையினர், கிï பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடல் பகுதி சீல்வைக்கப்பட்டுள்ளதால் கடலுக்குள் அடையாள அட்டை இல்லாத வேறு யாரும் செல்ல முடியாது. அடையாள அட்டை வைத்துள்ள மீனவர்கள் மட்டுமே படகின் எண்களை தெரிவித்து மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

உரிய அனுமதி பெறாமல் வேறு படகுகள் கடலுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது படகில் சென்றால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

இந்தநிலையில் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமுக்கு அமைச்சர்கள் சுப. தங்கவேலன், பெரியகருப்பன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தங்கியுள்ள அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அகதிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் அவர்களது எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முகாமில் கூடுதல் வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொடர்ச்சியா 8 ஆட்டங்களில் வெற்றி: பிரேசிலின் சாதனையை ஆஸ்திரேலியா தடுக்குமா?- நாளை பலப்பரீட்சை
Next post தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு