வில்லாக வளையும் மங்கை..!!

Read Time:2 Minute, 1 Second

1941article-240நம்மில் பல­ருக்கும் குனிந்து கால் விரல்­களைத் தொடு­வதே சிர­மாக இருக்கும். ஆனால், உலகின் மிகவும் நெகிழ்­வுத்­தன்­மை­யான உடலைக் கொண்ட மங்­கை­யான ரஷ்­யாவைச் சேர்ந்த ஜுலி­யா கன்தெல் எனும் ஸ்லட்­டா­வுக்கு உடலை வில்­லாக வளைப்­பது சாதா­ரண விடயம்.

இவர் தனது கால் விரல்­களைத் தொட­வேண்­டு­மென்றால் மிக இல­கு­வாக உடலை வளைத்து சாதா­ர­ண­மாக காலை தலைக்கு மேல் கொண்டு வந்­து­வி­டுவார். 27 வய­தான ஸ்லட்டா தனது நெகிழ்­தன்­மை­யினால் கடின வளை­வுகள் மூலம் பல உலக சாத­னை­களை முறி­ய­டித்­துள்ளார்.

5.8 அடி உய­ர­மான முன்னாள் ஜிம்­னாஸ்டிக் கலை­ஞ­ரான இவரால் தனது உட­லினை வெறும் 50 சென்ரி மீற்றர் அள­வி­லான சதுர பெட்­டியில் அடக்கி வைக்க முடி­யுமாம்.

இது குறித்து ஸ்லட்டா கூறு­கையில், ‘இந்த உடல் வளை­வுளை மேற்­கொள்ளும் போது நான் இயற்­கை­யா­கவே உண­ரு­கிறேன்.

சில நேரங்­களில் நீண்ட நேரம் புகைப்­ப­ட­மெ­டுக்க போஸ் கொடுத்தால் சற்றே வச­தி­யில்­லா­தது போல இருக்கும். ஆனால், யாராக இருந்­தாலும் நீண்டநேரம் கீழே இருந்தால் தசை விறைப்­ப­டையும் என நான் எண்­ணு­கிறேன்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

ஜேர்­ம­னி யில் விரைவில் நடை­பெ­ற­வுள்ள சர்வதேச மாநாடு ஒன்றில் ஸ்லட்டா தனது திறமைகளை நேரடியாக காண்பிக்கவுள்ளார்.

1941article-2408787-1 1941article-2408787- 1941article-24087 1941article-240 1941article-2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியா போரை தடுக்க ரஷியா தீவிர முயற்சி: அமெரிக்காவுடன் பேசுவதற்கு பயணம்..!!
Next post பிகினி ஆடைக்கு அடிமையான கொரிய யுவதி…!!