காட்டு யானைகளால் மட்டு., அம்பாறை மக்கள் அசௌகரியம்..!!

Read Time:1 Minute, 38 Second

download (10)மட்டு., அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புற கிராம மக்கள் காட்டு யானைகளை விரட்டுவதற்கு இரவு வேளையில் தீப்பந்தங்களுடன் காவலில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. மட்டக்களப்பு, பேராதீவுப்பற்று, வவுணதீவு, வாகரை போன்ற பிரிவுகளிலும் அம்பாறை மத்திய முகாம், சம்மாந்துறை, நயினா காடு, பளவெளி, வளத்தாப்பிட்டி, வரிப்பத்தான் சேனை, சம்புநகர், தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, பொத்துவில் ஆகிய பிரிவுகளிலும் பகல் இரவு வேளைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உட் பிரவேசிக்கின்றன.

இதனால் பகலில் தொழிலையும் இரவில் நித்திரையையும் இழந்து தவிப்பதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே எல்லைக் கிராமங்களில் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிகினி ஆடைக்கு அடிமையான கொரிய யுவதி…!!
Next post மிஸ் லெபனான் அழகுராணி..!!