மழைக்குருவியின் கூடுகளுடன் இருவர் கைது..!!
இலங்கை மழைக்குருவியின் கூடுகளை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
15 கிலோகிராம் நிறைகொண்ட கூடுகளையே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தம்வசம் வைத்திருந்துள்ளனர்.
கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் வைத்தே இவ்விருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மட்டும் காணப்படும் இந்த பறவைகளின் கூடுகளை குலைப்பது தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் இருவரும் தலா 20 ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை செப்டெம்பர் 5 ஆம் திகதிக்கு எடுத்துகொள்ளப்படவிருகின்றது.