தனமல்வில பகுதியில் 500 கிலோ கிராம் கஞ்சா மீட்பு..!!
மொனறாகலை தனமல்வில பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
தனமல்வில – அரம்பேகெம பகுதியில் வைத்து இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
லொறியொன்றில் குறித்த கஞ்சா தொகை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் சோதனையின் போது ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.