முன்னாள் பெண் புலி உறுப்பினர் சிறுவர் போராளிகளை பயிற்றுவித்ததாக வாக்குமூலம்..!!

Read Time:3 Minute, 41 Second

ltte.wimanஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவர் புலிகள் இயக்க சிறுவர் போராளிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக ஏசியோ என்ற அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு சம்மேளனம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுக்கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரஞ்சனி, தாம் சிறுவர் போராளிகளுக்கு பயிற்சியாளராக இருந்தமையை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று ´தெ ஏஜ்´ செய்திதாள் தெரிவித்துள்ளது.

தாம், விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேனல் பதவியை வகித்ததாகவும் 1990 ஆண்டுகளில் இலங்கைப் படையினருடன் இரண்டு சண்டைகளில் பங்கேற்றதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளிடம், ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

11 வயதில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து ரஞ்சனி 17 வருடங்கள் அந்த அமைப்பில் இருந்துள்ளார்.

ஏகே – 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ள அவர், குண்டுகளை வெடிக்க வைப்பதில் பரீட்சியம் பெற்றிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்பர் என்ற தமது கணவர் 2006 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்டதாகவும் ரஞ்சனி அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்த இவர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குற்றம் சுமத்தப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவரைப் போல மேலும் 47 பேர் தடுத்து வைக்கப்படடுள்ளனர். எனினும் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து வாதாடிய நிலையில் ரஞ்சனி அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

ரஞ்சனி என்ன காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்ற விளக்கத்தை ஏசியோ நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

34 வயதான ரஞ்சனி, புகலிடம் கோர தகுதியற்றவர் என்று ஏசியோ தெரிவித்துள்ளது.

அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கலாம் என்றும் ஏசியோ சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு குறித்த தகவல்களை மறைக்காமல் வழங்கியதன் அடிப்படையில் புகலிட அந்தஸ்து நிராகரிக்கப்பட மாட்டாது என்று ஏசியோ தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் சட்டத்தின் அடிப்படையில் ரஞ்சனி அவுஸ்திரேலியாவில் வாழ்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று ´தெ ஏஜ்´ ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழுத்தறுத்து கொன்றெரித்த இரு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை..!!
Next post சீன தலையீடு குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை..!!