100 பேரை பலியெடுத்த கப்பலில் அகதிகளை கடத்திய இலங்கையர் கைது..!!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய படகில் அகதிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அக்ரம் என்ற நபரே தெற்கு ஜயர்த்தா பகுதியில் வைத்து இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா நோக்கி 210 பேரை படகில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் படி இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த படகில் பயணித்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 100 பேர் வரையில் உயிரிழந்ததோடு பலர் காணாமற்போயிருந்தனர்.
இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகே விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.