கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கோர்ட்டு நீதிபதியாக இந்தியர் நியமனம்..!!
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வக்கீல் சுனில் ஆர்.குல்கர்னி (41). இவரை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சாந்தா கலாரா கவுன்டி சுப்பீரியர் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் உத்தரவிட்டார்.
இந்த பகுதி கோர்ட்டுக்கு தெற்கு ஆசியாவை சேர்ந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்த நியமனம் குறித்து கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவித்த போது மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன் என குல்கர்னி தெரிவித்தார்.
இவர் 1996–97–ம் ஆண்டுகளில் கலிபோர்னியா கிழக்கு மாவட்ட நீதிபதியிடம் சட்ட அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். சில மாதங்களுக்கு முன்பு இந்தியரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் அமெரிக்க உயர் கோர்ட்டுக்கு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.