ஊருக்குள் யானை புகுந்ததால்அல்லோல கல்லோலம்..!!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, அலவக்கரைப் பிரதேசத்திற்குள் இன்று அதிகாலை யானைகள் உட்பிரவேசித்ததால் தாம் பீதியுடன் பொழுதை கழித்ததாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் கிரமாத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டுத்தோட்டங்கள், மதில் சுவர்கள், நெற்களஞ்சியசாலைகள் என்பவற்றை நாசம் செய்ததாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பிரதேசம் அண்மைக்காலமாக காட்டுயானைகளினால் பாதுகாப்பற்ற பிரதேசமாக காணப்படுவதுடன் அப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் இரவுப் பொழுதை அச்சத்துடுன் கழிப்பது குறிப்பிடத்தக்கது.