அரசியலில் குதிக்க விரும்பும் ஹொலிவூட் நடிகை..!!
எதிர்காலத்தில் அரசியல் வாழ்க்கையில் தான் ஈடுபடக்கூடும் என ஹொலிவூட் நடிகை ஸ்கார்லட் ஜொஹான்ஸன் கூறியுள்ளார்.
அரசியல் குடும்பமொன்றிலிருந்து தான் வந்ததாகவும் எதிர்காலத்தில் தான் அரசியலில் பெரும் குரலாக விளங்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
28 வயதான ஸ்கார்லன் ஜொஹான்ஸன், 1994 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணொருவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பது சிறந்தது எனக்கூறும் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டன் தெரிவாகுவதற்கு தான் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.
அதேவேளை, தேர்தல்களில் வாக்களிக்காமல் இருப்பது பொறுப்பற்ற நடவடிக்கை எனவும் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் விமர்சித்துள்ளார்.