கைத்துப்பாக்கி விற்றவரும் வாங்கியவரும் கைது..!!
காலி மாவட்டம் ரத்கம – கம்மலவத்த – கனேகொட பிரதேசத்தில் கைத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்துவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து துப்பாக்கி உதிரிபாகங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கி கொள்வனவு செய்த ரனபனாதெனிய பகுதி நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, வாள், கத்தி என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.