காப்பாற்றப்பட்ட மாடு முழந்தாளிட்டு வணங்கியது..!!
இறைச்சிக் கடைக்கு வழங்கப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்ட மாடொன்று முழந்தாளிட்டு வணங்கியுள்ளது.
மீட்டெடுத்த வர்த்தகரையும் அவரது வீட்டு அங்கத்தவர்களையும் அக்கிராமத்திலுள்ள விஹாரையின் தேரரரையுமே குறித்த மாடு முழந்தாளிட்டு வணங்கியுள்ளது.
களுத்துறை மாவட்டம் ஹொரனை, கோணபொலவைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.டீ.டியுட்டர் என்பவர் வளர்க்கின்ற மாடே இவ்வாறு செய்துள்ளது.
இறைச்சி கடைக்கு கொடுக்கப்பட்டிருந்த மாட்டைஇன்றைக்கு நான்குவருடங்களுக்கு முன்னர் மீட்டெடுத்து வர்த்தகர் தனது மாட்டுப்பட்டியில் கட்டிவளர்த்து வருகின்றார்.