உலகின் இள வயது விமானியாக 5 வயது சீனச் சிறுவன் சாதனை..!!
சீனாவைச் சேர்ந்த 5 வயதான சிறுவனொருவன் யாருடைய உதவியுமின்றி விமானத்தினைச் செலுத்தி உலகின் மிக இள வயது விமானியாக சாதனை படைத்துள்ளான்.
டுஓடுஓ என செல்லமாக அழைக்கப்படும் ஐட் எனும் 5 வயதான சிறுவனே இச்சாதனைக்குரியவனாகும். சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள வனவிலங்கு பூங்காவிற்கு மேலாக 35 நிமிடங்கள் விமானத்தை செலுத்திய இச்சாதனையை ஏற்படுத்தியுள்ளான் ஐட்.
இவன் பீ 3 என்ற 100 கி.கி நிறையுடைய விமானத்தையே ஓட்டியுள்ளான். இதன்போது ஐட்டின் பயிற்சியாளர் விமானத்தின் பின்னால் அமர்ந்துள்ளார். ஆனால், இச்சிறுவன் அவரின் எதுவிதமான உதவிகளுமின்றி தனியாக பறந்துள்ளான்.
ஐட்டின் தந்தை லெய்ஷெங் ஒரு முகாமையாளராக தனியார் துணிக்கடை (டெக்ஸ்டைல்) ஒன்றில் கடமை புரிகின்றார். இவர் தனது மகனின் தனியார் விமானம் ஓட்டும் பாடத்திற்கு 30,000 யுஆன்களை (இலங்கை மதிப்பில் சுமார் 65 இலட்சம்) கட்டணமாக செலுத்தியுள்ளார்.
இச்சிறுவன் விமானம் ஓட்டக் கற்க தினமும் 4.30 மணிக்கே எழுந்து 5 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துவிடுவானாம். தனது மகனின் பயிற்சி திட்டமிடல்களை சீனாவிலுள்ள வெய்போ சமூக இணையத்தளத்தில் வெளியிட்டுக்கொண்டுள்ளார் லெய்ஷெங்.
இதேவேளை ஐட்டை -13 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையில் பனியில் நிர்வாணமாக ஓட திணிப்பது வீடியோவொன்றில் தெரியந்துள்ளது. இவ்வாறு கடினமாக இலக்குகளை மகனுக்கு வழங்குவதால் லெய்ஷெங்கை அந்நாட்டு ஊடகங்கள் கழுகுத் தந்தை என அழைக்கிறது.
கடினமான பயிற்சிகள் சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தான் பிரபல்யமடைய மகனைப் பயன்படுத்துகிறாரா லெய்ஷெங் எனவும் பலர் கேள்வி எழுப்யுள்ளனர்.
ஐட், ஏற்கெனவே சர்வதேச படகு ஓட்டும் போட்டியில் இரு தடவைகள் பங்கேற்றுள்ளதுடன் புயல்மழையின் போது ஜப்பானின் புஜியானா மலையிலும் ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Average Rating