மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது மாநாடு..!!
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது பேரவை மாநாடு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நாவின் அமைப்பின் காரியாலயத்தின் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்வரும் 25ஆம் திகதி மனிதவுரிமைகள் தொடர்பில் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால் இலங்கை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்மூல அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்படி, நவனீதம் பிள்ளையினால், ஏற்கனவே இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கு அமைய, பொறுப்பு கூறல் மற்றும் மீளமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்படவுள்ளது.
கடந்த வருட மாநாடு உட்பட ஒவ்வொரு மாநாட்டிலும் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த முறையும் மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொள்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்தபோதும், ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.