விமான இறக்கையின்மீது 93வயதானவர் பயணித்து புதிய சாதனை..!!

Read Time:1 Minute, 42 Second

1924Wing-Walker-1பிரித்தானியாவைச் சேர்ந்த 93 வயதான நபரொருவர் விமான இறக்கையின் மீது பயணித்த உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் மேற்கு மிட்லேண்டிலுள்ள ஷெர்லி எனுமிடத்தைச் சேர்ந்த 93 வயதான டொம் லக்கீ என்பவரே இச்சாதனையை கடந்த சனிக்கிழமை ஏற்படுத்தியுள்ளார்.

ஐரிஸ் கடலுக்கு மேலாக ஒன்றரை மணித்தியாலம் விமானத்தின் இறக்கையில் பறந்துள்ளார் டொம்.

தரையிறங்கியதில் மகிழ்ச்சி எனக் கூறிய டொம் மேலும் கூறுகையில், சக்திவாய்ந்த விமானத்தில் கடும் சத்தமாக இருந்தது. என்னால் ஏராளமான ஆடுகளையும் மாடுகளையும் மற்றும் வாகனங்களையும் பார்க்க முடிந்தது. அவை விளையாட்டு பொருட்கள் போல் இருந்தன.

எனக்கு பயமாக இருந்தது ஆனால் இப்போது இல்லை. எனது சாதனையை நானே முறியடித்துள்ளேன் என்றார்.

13 வருடங்களுக்கு முன்னர் முதன்முறையாக விமான இறக்கையில் பறந்த இவர் 2005ஆம் ஆண்டு 85ஆவது வயதில் விமான இறக்கையில் பறந்து உலகின் மிக வயதான விங் வோகர் என்ற சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது ஊழியர்களையே ரகசியமாய் கண்காணிக்கும் அமெரிக்க உளவுத்துறை..!!
Next post ‘நிமிர்ந்து நில்’ – முதற்பார்வை டீஸர் (VIDEO)