வாங்’ தேசிய பூங்காவில், தந்தங்களுக்காக ‘விஷம்’ வைத்து கொல்லப்பட்ட 41 யானைகள்..!!

Read Time:1 Minute, 58 Second

08-elephants777-600-jpgஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேசியப் பூங்காவில் 41 யானைகள் சயனைடு வைத்துக் கொள்ளப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 வன விலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் உள்ள, கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற ‘வாங்’ தேசியப்பூங்கா. இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரும்பாலும் யானைகளும், காண்டாமிருகங்களும் முறையே அவைகளின் தந்தம் மற்ரும் கொம்புகளுக்காக வேட்டையாளர்களால் வேட்டையாடப் பட்டதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணாக்கெடுப்பின் படி, கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

யானைகளைக் கொன்ற கொள்ளையர்கள் அதன் தந்தங்களை வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்பதை உறுதி செய்துள்ளார் வாங் பூங்காவின் செய்தித்தொடர்பாளர்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 6 வன விலக்கு வேட்டையாளார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுந்தர் சி.யின் மத கஜ ராஜா – புதிய திரையரங்க ட்ரெய்லர் (VIDEO)
Next post விண்வெளிக்கு இரண்டாவது முறையாக குரங்கை அனுப்ப ஈரான் திட்டம்..!!