By 11 September 2013 0 Comments

மிகப்பெரிய மார்பகங்களால் வாழ்க்கை சீரழிவதாக கூறும் பெண்.. (PHOTOS)

2042article-பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெரிய மார்பகங்கள் காரணமாக வாழ்க்கை சீரழிவதாக கூறுகிறார். மேரி பிக்ஸ்டொக் எனும் இப்பெண் 44 வயதானவர்.

பிரித்தானிய அரசாங்க வைத்தியசாலையில் தனக்கு மார்பகத்தை சிறிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை  மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

முன்னர் 139 கிலோ எடையுடன் இப்பெண் காணப்பட்டார். மேற்படி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடியபோது, அரச செலவில் இச்சிகிச்சையை செய்துகொள்வதற்கு தகுதி பெற வேண்டுமானால் உடல் எடையை குறைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்.


அதையடுத்து சுமார் 50 கிலோ அளவு எடையை அவர் குறைத்துக்கொண்டார். எனினும் தனக்கு மார்பகத்தை குறைப்பதற்கான சத்திரசிகிச்சையை செய்வதற்கு மறுத்துவர்கள் மறுப்பதாக மேரி பிக்ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

தனது மார்பக்கள் மிகப் பெரியவையாக இருப்பதால் நடப்பதுற்குகூட தான் சிரமப்படுவதாக அவர் கூறுகிறார்.

இதைவிட நான் உடல்பருமனுடன் இருந்திருக்கலாம். அப்போது வயிறும் பெரிதாக இருந்ததால் ஓரளவுக்கு சௌகரியமாக இருந்தது. சத்திரசிகிச்சையை எதிர்பார்த்து எடையைக் குறைத்தபின் மார்பகங்களை சிறிதாக்க முடியாமல் நான் திண்டாடுகிறேன்” என்கிறார் மேரி பிக்ஸ்டொக்.





Post a Comment

Protected by WP Anti Spam