பொதுநலவாய மாநாட்டு வருகையை உறுதி செய்தார் ஆஸி. புதிய பிரதமர்
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி எட்பொட் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தான் பங்குபற்றுவதை உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அவர் தனது வரவை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்து கொள்ள மாட்டார். சுமார் 40 வருடங்களின் பின் அவர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாது தனது பிரதிநிதி ஒருவரை அனுப்புகிறார்.
இலங்கையின் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடத்துவது சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
மாநாட்டை புறக்கணிக்க உள்ளதாக கனடா எச்சரிக்கை விடுத்து வருகிறது.