பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு விஜயம்

Read Time:3 Minute, 53 Second

mahi-soniஇலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோஜா இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”கச்சத்தீவில் இந்தியா – இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை இந்தியா இழக்க நேரிடும்.

இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும்.

வெளிநாட்டவர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் மாநில அரசு அதற்கான நிலம் கையகப்படுத்தி கொடுக்க முன்வரவில்லை. தமிழக அரசு நிலம் கொடுத்தால் 2023 ஆம் ஆண்டில் தொழில் புரட்சி ஏற்படும்.

அதே போல அதிக நிலம் வைத்துள்ளவர்கள் குழுவாக இணைந்து தொழில் தொடங்க முன்வந்தால் மத்திய அரசு 75 சதவீதம் பங்கு தொகை கொடுக்க தயாராக உள்ளது. மேலும் உள்ள 25 சதவீதம் மட்டும் குழுக்கள் முதலீடு போட்டால் போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கஷ்டப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள். அதே போல தமிழக மீனவர்கள் மீது கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்கள், கடந்த ஆண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.தொடர் தாக்குதல்கள் நடக்கிறதே என்றனர்.. அதற்கு பதிலளிக்கையில்,

கடந்த 4 ஆண்டுகளில் அந்த மாதிரி சம்பவம் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் எப்.ஐ.ஆர் (காவல் நிலையத்தில் பதியப்படும்) தகவல் அறிக்கையை காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.

மேலும்.. இலங்கை சீனா உறவால் இந்தியா பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டது. அதே போல பாகிஸ்தான் கேட்டாலும் யோசிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டு வருகையை உறுதி செய்தார் ஆஸி. புதிய பிரதமர்
Next post தாய்மை பொங்க பிகினி உடையில் வந்த மிஸ் குரகாவோ நீக்கம்