8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம்
8 யானைத் தந்தங்களுடன் கைதான, பலாலி வசாவிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரொருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஹபரண பொலிஸ் பிரிவின் திருகோணமலை ஹபரண வீதி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் நேற்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, 50,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.