டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு- குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை

Read Time:1 Minute, 41 Second

ind.delhi-001ஓடும் பஸ்ஸில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் வைத்து 6 பேர் கொண்ட குழுவொன்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் இளம் குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம் குற்றவாளிக்கு அண்மையில் 3 ஆண்டுகள் தண்டனை விதித்து டெல்லி சிறுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மீதி 4 பேருக்கும் இன்று டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா இன்று 2.30 மணியளவில் மரண தண்டனை விதித்து தீர்ப்ளித்ததார்.

இந்தியாவில் பாலியல் வல்லுறவு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ind.delhi-001

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTOS)
Next post பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது