விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல்
விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொலைக்காட்சி நடிகையொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நடிகை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கென இவர் 5,000-10,000 ரூபா வரையான தொகையை கட்டணமாக அறவிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் 22 வயதானவரெனவும் குழந்தையொன்றின் தாயெனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சில தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் தோன்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.