பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..
பெலாரஸில் நடந்த “மிஸ் சுப்பர் நெஷனல்” அழகிப் போட்டியில் குரகாவோ தீவை சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கலந்து கொண்டார்.
அவர் பிகினி உடை அணிந்து வந்த போது தான் கர்ப்பமாக இருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது, அவரது வயிறு உப்பிக் காணப்பட்டதால், நடுவர்கள் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதற்கான சோதனைக்கு உத்தரவிட்டனர்.
சோதனையில் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கெனவே வெசின்டேவுக்கு தெரியுமாம்.
இதனையடுத்து போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், எனினும் சக போட்டியாளர்களை ஊக்குவிக்க போட்டி அமைப்பாளர்கள் அனுமதி தந்தனர்.
இந்தப் போட்டியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அழகி முத்யா ததுல் பட்டம் வென்றார். இப்பட்டம் வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.