கயிற்றின் மீது வேகமாக நடந்து உலகசாதனை படைத்த நாய்
பிரித்தானியாவிலுள்ள 4 வயதான நாயொன்று கயிற்றின் மீது வேகமாக நடந்து உலகசாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.
பிரித்தானியாவின் நோவிச் எனுமிடத்தில் வசிக்கும் ஜோன்ஸன் வளர்க்கும் ஒஷி என அழைக்கப்படும் 4 வயதான நாயே உலகசாதனை படைத்தது.
நோபோல்க் நகரிலுள்ள விலங்கு பாதுகாப்பு நிலையத்தில் வைத்து ஒஷி 3.5 மீற்றர் (11.6 அடி) நீளமான கயிற்றை 18.22 செக்கன்களில் எதுவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி கடந்துள்ளது. நாயொன்றினால் மிக வேகமாக கயிற்றில் கடந்த சந்தர்ப்பம் இதுவே ஆகும்.
இது குறித்து தச்சு வேலை செய்யும் 51 வயதான நாயின் உரிமையாளர் ஜோன்ஸன் கூறுகையில், ஒஷிக்கு முறையான பயிற்சிகள் எதுவும் வழங்கவில்லை. இணையத்தளத்தில் பார்வையிட்டே நுட்பங்கள் பழக்கப்பட்டன. பயிற்சிகளில் ஒஷி மகிழ்சியுடன் விளையாடுவது போல செயற்பட்டது.
தற்போது ஒஷி என்னை பெருமைபடுத்தியுள்ளது. நான் எனது நாயுடன் நட்புடன் உறவாடி இணைந்து செயற்பட முடிந்ததே கின்னஸில் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.